search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்"

    ஆலன் பார்டன் என்னிடம் கேட்டிருந்தால் பந்தை சேதப்படுத்தியிருப்பேன் என ஆஸ்திரேலியாவின் தலைமை பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்கா சென்று நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 2-வது டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்ற நிலையில், 3-வது டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்றது. தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெரியவந்தது.

    பின்னர் நடைபெற்ற விசாரணையில் வார்னர்தான் இதற்கு மூலக்காரணமாக இருந்தார் என்பது தெரியவந்தது. அத்துடன் கேப்டன் ஸ்மித் இந்த விவகாரம் தனக்குத் தெரியும் என்றார். இதனால் பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடையும், வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு தலா ஓராண்டு தடையும் விதிக்கப்பட்டது.

    இந்த சம்பவத்தால் தலைமை பயிற்சியாளராக இருந்த லீமென் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக ஜஸ்டின் லாங்கர் தற்போது தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.



    சீனியர் வீரர்கள் சொல்லியிருந்தால் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியிருக்கனும். நான் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அடிலெய்டில் 1993-ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்டில் அறிமுகமானார். அப்போதுள்ள அணி வேறு. அந்த காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்றார்.

    மேலும், இதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ‘‘பந்தை சேதப்படுத்த வேண்டும் என்று ஆலன் பார்டன் என்னிடம் கேட்டிருந்தால், நான் பந்தை சேதப்படுத்தியிருப்பேன். ஏனென்றால், நான் அதிக அளவில் பயந்திருக்கமாட்டேன். ஆனால் ஆலன் பார்டன் இதுபோன்று ஒருபோதும் என்னிடம் கேட்டிருக்கமாட்டார். பயிற்சியாளர் பாபி சிம்சனும் என்னை கொன்றிருக்கமாட்டார்’’ என்றார்.
    ×